Thursday, March 12, 2020

தமிழன் வாழ்வு முறை


கையக் கழுவு என்றாள்
கருவாடு தின்னாதை என்றாள்
பைய நடவென்றாள்
பசித்து உண்ணென்றாள்

நெய் விளக்கு ஏற்றென்றாள்
நெடுநேரம் முழியாதையென்றாள்
மஞ்சள் தெளியென்றாள்
மாட்டுச் சாணத்தில் மெழுகென்றாள்

துளசி வணங்கென்றாள்
தூபமிட சாம்பிராணியென்றாள்
திருநீறு பூசென்றாள்
திருப்பாவை படியென்றாள்

தோய்த்து உடுத்தொன்றாள்
தோளில் சுற்று சால்வையென்றாள்
விரதம் இரு என்றாள்
வெளியில் நடவென்றாள்

மனவழுத்தம் மாசென்றாள்
மங்கை கூந்தலில் மல்லிகை நன்றென்றாள்
குங்குமம் இடு என்றாள்
கோவில் குளம் போ என்றாள்

மரக்கறி உண்ணென்றாள்
மாட்டிறைச்சி வேணாமென்றாள்
மலச்சிக்கல் நோயென்றாள்
மாதமொரு முறை பேதிக்கு குடியென்றாள்
மிளகு ரசம் அமுதென்றாள்
முன்னைநாள் மிச்சம் நஞ்சென்றாள்
கைகூப்பி வணங்கென்றாள்
கையில் படாது மாசென்றாள்

வேப்பிலை தொங்கவிடு என்றாள்
வேப்ங்காத்து விசம் நீக்குமென்றாள்
மாவிலை தோறணம் காப்பென்றாள்
மாலையில் தீபம் ஏற்ரென்றாள்

மஞ்சள் பூசி குளி என்றாள்
கஞ்சல் குப்பை கூட்டு என்றாள்
சுவருக்கு சுண்ணாம்பு அடி என்றாள்
சுவைச்சு சாப்பிடு தாம்பூலம் என்றாள்

பனை மட்டையில் நாக்கு வழியென்றாள்
பல்லு தீட்டு ஆலங்குச்சி என்றாள்
நல்லெண்ணை பூசி குளி என்றாள்
சோப்பு சவுக்காரம் ஒதுக்கென்றாள்

குளிர்பானம் நஞ்சென்றாள்
தெளிந்த மோர் குளிர்ச்சி என்றாள்
வீதிச் சாப்பாடு ஒதுக்கு என்றாள்
வீட்டில் சமைத்து உண் என்றாள்

தமிழன் வாழ்வு முறை
தலைமுறைக்கு ஏற்ற முறை
உன் குலவாசல் வாராது
குலம் கெடுக்கும் நோயின் குறை

உரை
உதயகுமார் காங்கேசன்துறை


https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

No comments:

Post a Comment