Sunday, March 1, 2020

பாம்பாட்டிச்சித்தர்

தெளிந்து தெளிந்து
தெளிந்து ஆடுபாம்பே! 
சிவன் சீர்பாதங்கண்டு
தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம் பே! 
தெளிந்து ஆடுபாம் பே! 
சிவன் அடியிணை
கண்டோமென்று ஆடு பாம்பே!

பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.  யோக, ஞான நெறியில் குண்டலினி என்பதைப் பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர்  என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்ற காரணப்பெயரைப் பெற்றார்மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.


பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!
என்று . உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

No comments:

Post a Comment