Thursday, April 30, 2020

போகர் சத்தகாண்டம் - 7000 Bogar Saththakandam 7000

மிகச் சாதாரண மனிதனும் சித்த நிலை அடைய!!!

சித்தர்கள் எந்த நிலையிலும் தன்நிலை மாறாமல், மனதை நிலைநிறுத்தி, மௌனத்துடன், ஒரு சிந்தையின் தெளிவுடன் பல ஆண்டுகள் யோகப் பயிற்சியை மேற்கொண்டு, தங்கள் ஆன்ம பலத்தை வலுப்படுத்தி, மனோசக்தியால் எதையும் சாதிக்கும் திறன் பெற்று, தங்களுடைய மனதை தன் வசப்படுத்தி மிக அடக்கமாக விளங்கினர்.
https://www.facebook.com/groups/305917699863621
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் மனதை மவுனமாக்கி, தன் வயப்படுத்தி, ஆன்ம பலத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதை தெளிவாக தமிழில் போகர் விளக்கியுள்ளார்.

" மகிழ்ச்சியாய் ஒருவருடன் வாய் பேசாதே!

மனது தனில் ஆங்காரந் தனை எண்ணாதே!

நெகிழ்ச்சியாய் ஒருவருக்கும் இடங் கொடாதே!

நேர்மையாய் நடந்துகொள்ளு பொய் சொல்லாதே!

இகழ்ச்சிதான் ஒருவர் சொன்னால் குற்றம் வேண்டாம்!

எத்தனைதான் சொன்னாலும் குற்றம் வேண்டாம்!

தகழ்ச்சியாய்த் தண்மை சொல்லு சத்ரா திக்குஞ்

சாங்கமாள் ஏழையைப் போல் தரித்திடாதே."!

-போகர் சத்தகாண்டம் - 7000 என்னும் நூலில் இரண்டாவது காண்டத்தில் 1472 வது பாடல்.

சித்தர் அறிவியல்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு

மிக, மிக அவசரம்

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2,3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டிரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடை லாம் மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு யாரும் கவலைப்பட வேண்டாம்.

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றி கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி இருக்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அணைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும்.

இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.
https://www.facebook.com/groups/305917699863621
அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்.

தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டி யும் ஒரு மருத்துவமனைக்கு சமானம்.
அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பர்ய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது.

இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள் எனும் செய்தியை நான் கேள்விப்பட்டேன். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்.

இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி, பேஸ்ட் செய்யலாம் என்ன வேணாலும் பண்ணலாம். காப்பி, பேஸ்ட் செய்யும் பொழுது எனது பெயரை நீங்கள் குறிப்பிட வேண்டும் எனும் அவசியம் கூட இல்லை. எனக்கு வேண்டியது ஒண்ணே ஒன்னு தான். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பக்ஷம் சென்னையில் வாழும் அணைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு.

இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்.

இந்த பதிவை எவ்ளவு மொழிகளில் மொழி பெயர்க்க முடியுமோ மொழி பெயருங்கள்.
https://www.facebook.com/groups/305917699863621
இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அணைத்து உலக நாடுகளுக்கும் போய் சேர்ந்தால் அதன்மூலம் 2,3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடுவோம்.

அதனால் குறைந்தது பஇந்த பயனுள்ள பதிவை அணைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்.
https://www.facebook.com/groups/305917699863621
via Krishna Prasad

சித்தர் அறிவியல்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

Wednesday, April 29, 2020

வள்ளலார் சிந்தனை Wisdom of Vallalar

வள்ளலார் சிந்தனை தெளிவுரை. செய்யக்கூடாதவை....

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.



சிவலிங்கம் Shiva lingham


அம்மை அப்பனின் வடிவம் சிவலிங்கம் ..!
"இலிங்கம தாவது
யாரும் அறியார்
இலிங்கம தாவது
எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது
எண்ணெண் கலையும்
இலிங்கம தாக
எடுத்தது உலகே"
-ஆசான் #திருமூலர்
சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது.
https://www.facebook.com/groups/305917699863621
தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது.
இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே.
இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.
https://www.facebook.com/groups/305917699863621
மனிதர் மட்டுமல்ல இந்த அண்டமே சிவலிங்க வடிவே. ஆண் - பெண் சேர்க்கை மட்டுமல்ல. மழைத்துளி மண்ணைச் சேர்தலும் இலிங்க வடிவே. எல்லா ஆக்கமும் அழிவும் இலிங்க வடிவே. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.
சிவமும், சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன.
இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள்.
சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள்.
மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அகரம் சிவம், உகரம் சக்தி, மகரம் மலம், நாதம் மாயை, விந்து உயிர் ஆகும்.
இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கையைக் குறிக்கும்.
"மானுட ராக்கை
வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை
வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை
வடிவு சதாசிவம்
மானுட ராக்கை
வடிவு திருக்கூத்தே"
-ஆசான் திருமூலர்
#திருமந்திரம் -
-பிண்டலிங்கம் - கவி எண் 1726.
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே
சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும்
திருக்கூத்துமாகவும் உள்ளது.
இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும்.
இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.
இவ்வரிய வாய்ப்பு மனிதருக்கு இருந்தபோதிலும் புண்ணியபலமும், குருவருளும், இறையருளும் இல்லாததால் மனிதர்கள் இந்த வாய்ப்பை அடையமுடியவில்லை.
"பெறுதற் கரிய
பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய
பிரானடி பேணார்
பெறுதற் கரிய
பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர்
பேறிழந் தாரே."
- திருமந்திரம்
https://www.facebook.com/groups/305917699863621
-கேடு கண்டிரங்கல் - கவி எண் 2090.
ஓங்காரக்குடில் Ongarakudil

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!🙏🙏

பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
உள்ளுணர்வுகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. காப்பு அணிவதும் நரம்பு மண்டலத்தின்புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்
https://www.facebook.com/groups/305917699863621
வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிப்படுத்தப்படி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .வல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் .

சித்தர் அறிவியல்

*சித்தர்கள் அவசர அறைகூவல்..!*
*மாந்தரே..! எம் சேய்களே..! தீதும் நன்றும் உம் செயலே..!* கருணைபடக் கூறுகிறோம் மாந்தரே கடவுளையோ/ இயற்கையையோ குறைகூறிப் பலன் ஏதுமில்லை. கருணைமிகு மானிடரே தீதும் நன்றும் கடவுளோ/ இயற்கையோ தந்து வருவதில்லை. படும் வேதனைகள் எல்லாம் வினைக்குற்றமே (சிந்தை, சொல், செயல் குற்றங்கள்) அன்றி வேறேதுமில்லை. சக மனிதருக்கும், வாயில்லா உயிர்களுக்கும் நீங்கள் காலங்காலமாகச் செய்த தீவினையின் உச்சமே உங்களை அழிக்கும் அச்சமாக மாறியுள்ளது. மன்னிப்புக் காலம் முடிந்துவிட்டது. கிருமித்தொற்று சில மாதங்களில் குறையும். மீணடும் உங்கள் சிந்தை, சொல், செயல்களை மாற்றாவிட்டால் நச்சுக்கிருமிகள் முதற்கொண்டு இயற்கை கோரத் தாண்டவம் ஆடுமென கருணையுடன் எச்சரிக்கிறோம். எல்லா உயிர்களையும் உங்கள் உயிர்போல் பாருங்கள். காலங்காலமாக உங்கள் முன்னோர் முதற்கொண்டு செய்த பாவமூட்டைகள் மன்னிக்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. *கருணை இழப்பீரானால் கருணையின்றி அழிவைச் சந்திப்பீர்கள். * உங்கள் பாற் கொண்ட அக்கறையால் கூறுகிறோம் சீவதயவுடன் இருங்கள். உங்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளுக்கு நீங்களே பொறுப்புதாரிகள். அச்சம் வேண்டாம் கருணைபட வாழுங்கள் உங்கள் எதிர்காலம் நலமாகும் வளமாகும். சுபம்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya