Saturday, April 25, 2020

கருட புராணம் - அறிமுகம் Karudapuranam

கருட புராணம் - அறிமுகம்

18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந்நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, 'பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன்' என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார்.
கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது. உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.

பிறந்தவன் இறப்பது நிச்சயம் என்பதை உணர வேண்டும். நமனுக்குப் பயந்து நல்ல தருமங்களை ஆற்றி அறநெறிப்படி வாழவேண்டும். வருணா சிரம தருமப்படி அதாவது அவரவர் குல மரபுப்படி வழுவாது நடப்போர் போகம், யோகம் ஒருங்கே பெற்று நீடுழி வாழ்ந்து இறுதியில் தமக்குரிய உலகை அடைவர். பற்றற்றவர்களாய், அறிஞர்களாகி பகவானைத் தியானித்து நல்வழியில் நற்பேறு பெற முயற்சி செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய அவர் ஆக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வாகும்.

காசியப முனிவருக்குக் கருடனே இப்புராணத்தைக் கூறினார். நான் வியாசரிடமிருந்து இதனைக் கேட்டேன் என்று மேலும் கூறலானார். முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்து இரண்டு அவதாரங்களைப் பார்ப்போம்.

1. முதன் முதலில் குமாரன் வடிவில் தோன்றி பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து தவம் செய்தார்.

2. பூவுலகை மீட்க வராக அவதாரம் எடுத்தார்.

3. பலவகைத் தந்திரங்களை உலகில் பரப்ப தேவரிஷியாய்த் தோன்றினார்.

4. நர நாராயணனாய் அவதரித்தார். (நரன், ஆவேசாவதாரம், நாராயணன் - அம்சாவதாரம்)

5. கபிலராக அவதரித்து சாங்கிய யோகத்தைத் தனது சீடர் அசூரிக்குக் கற்பித்தார்.

6. அத்திரி, அனுசூயை தம்பதிகளுக்கு மகனான தத்தாத்திரேயர் அவதாரம்.

7. சுவயம்பு மன்வந்ரத்தில் ருசி, ஆகுதியோருக்கு மகனாகத் தோன்றி பல யாகங்களைச் செய்தார்.

8. அடுத்து நபி, மேரு புத்திரனால் உருக்கிரமன் என்ற பெயரில் அவதரித்தது பற்றற்ற நிலையில் இருந்து அனைவர்க்கும் வாழ்வின் நன்னெறிகளைத் போதித்தார்.

9. பிருது என்ற பெயரில் தோன்றி பூவுலகத்திற்குத் தானியங்களையும், மூலிகைகளையும் வழங்கினார்.

10. மச்சாவதாரம் எடுத்து பிரளயத்திலிருந்து வைவஸ்வத மனுவைக் காத்தருளினார். வேதங்களையும் ரக்ஷித்தார்.

11. தேவாசுரர்கள் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைய வாசுகியை நாணாக்கி, மந்தர மலையை மத்தாக்கி கடையும்போது மலை உள்ளே அழுந்திட, அதனை ஆமை வடிவில் நிலைப்படுத்திய கூர்மாவதாரம்.

12. அடுத்து உலகில் மருத்துவம் பரப்ப எடுத்த தன்வந்திரி அவதாரம்.

13. அசுரர்களை ஏமாற்றி தேவர்களே அமுதம் பெறுமாறு பங்கிட எடுத்த அழகிய, கவர்ச்சியான மோஹினி அவதாரம்.

14. இரணியனைக் கொன்று, பக்தன் பிரகலாதனுக்கு அருளிட எடுத்த நரசிம்மாவதாரம்.

15. மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி அருள மூன்றடி மண் கேட்க எடுத்த வாமனாவதாரம் (திருவிக்கிரமா அவதாரம்)

16. தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்ற கார்த்தவீர்யாஜுனனையும், இருபத்தோரு தலைமுறை மன்னர்களையும் அழிக்கத் தோன்றிய பரசுராமர் அவதாரம்.

17. பராசரர், சத்தியவதி இருவருக்கும் மகனாகத் தோன்றிய வேத வியாசர்.

18. நாரதராக அவதரித்து தேவர்களுக்கு வாழ்க்கை முறை தத்துவங்களை உபதேசித்தது.

19. இராமாயணக் காவியத் தலைவனாக விளங்கிய இராமாவதாரம்.

20. கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்து கம்சன், சிசுபாலன் தந்தவக்கிரர்களை அழித்துப் பாண்டவர்க்கு உதவுதல், கீதோபதேசம் முதலியன.

21. புத்த மதத்தைத் தோற்றுவிக்க புத்தராகத் தோன்றினார் திருமால்.

22. அடுத்து கல்கி அவதாரம் எடுக்கப்போவதும் அவரே.
[சனகர், பலராமன் அவதாரமும் அவரே என்று சிலர் கூறுவர். அத்துடன் கஜேந்திரனுக்கு அருளத் தோன்றியது. வாலகில்யரிஷி (விராட் ஸ்வரூபமாய் விளங்குவது எல்லாம் அவனது அவதாரமே என்பர்.)]

புராணத் தோற்றம் பற்றிய வேறுவிதமான வரலாறு
==================

நாரதர், தட்சன், பிருகு முதலிய ரிஷிகள் பிரம்மலோகம் செல்ல அவர்களுக்குப் பிரம்மன் உபதேசம் செய்தார். பறவைகளின் அரசனாகிய கருடன் தவமியற்றி விஷ்ணுவைத் திருப்தி செய்ய, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று பகவான் கேட்க, கருடன் தான் பெருமானின் வாகனமாக வேண்டும் வரம் கேட்டான். மேலும் பாம்புகள் தன்னைக் கண்டு அச்சமுறவேண்டும் என்றும், புராணம் இயற்றும் ஆற்றல் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். இவ்வாறாக கருடன் இப்புராணத்தை விஷ்ணுவிடம் கேட்டு, பின்னர் பிரம்மனுக்குக் கூறினார். பிரம்மனிடம் இருந்து வியாசரும், அவர் மூலம் மற்றோரும் அறிந்தனர்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

ஶ்ரீ கருட அஷ்டோத்ரம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ௐ கருடாய நம:
ௐ வைந தேயாய நம:
ௐ கக பதயே நம:
ௐ காஶ்யபாய நம:
ௐ அக்னயே நம:
ௐ மஹா பலாய நம:
ௐ தப்த காஞ்சன வா்ணாபாய நம:
ௐ ஸுபர்ணாய நம:
ௐ ஹரி வாஹனாய நம:
ௐ சந்தோ மயாய நம:
ௐ மஹா தேஜஸே நம:
ௐ மஹோத் ஸாஹாய நம:
ௐ மஹா பலாய நம:
ௐ ப்ரஹ்மண்யாய நம:
ௐ விஷ்ணு பக்தாய நம:
ௐ குந்தேன்து தவளாநனாய நம:
ௐ சக்ர பாணி தராய நம:
ௐ ஶ்ரீ மதே நம:
ௐ நாகாரயே நம:
ௐ நாக பூஷணாய நம:
ௐ விஜ்ஞாநதாய நம:
ௐ விஶேஷக்ஞாய நம:
ௐ வித்யா நிதயே நம:
ௐ அனா மயாய நம:
ௐ பூதி தாய நம:
ௐ புவன தாத்ரே நம:
ௐ பூஷயாய நம:
ௐ பக்த வத்ஸலாய நம:
ௐ ஸப்த சங்தோ மயாய நம:
ௐ பக்ஷிணே நம:
ௐ ஸுரா ஸுர பூஜிதாய நம:
ௐ கஜ புஜே நம:
ௐ கச்ச பாஶினே நம:
ௐ தைத்ய ஹந்த்ரே நம:
ௐ அருணா நுஜாய நம:
ௐ அம்ருதாம்ஶாய நம:
ௐ அம்ருத வபுஷே நம:
ௐ ஆனந்த நிதயே நம:
ௐ அவ்யயாய நம:
ௐ நிக மாத்மனே நம:
ௐ நிரா ஹாராய நம:
ௐ நிஸ் த்ரை குண்யாய நம:
ௐ நிரவ்யாய நம:
ௐ நிர் விகல்பாய நம:
ௐ பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ௐ பராத் பராய நம:
ௐ பரஸ்மை நம:
ௐ ஶுபாங்காய நம:
ௐ ஶுபதாய நம:
ௐ ஶூராய நம: (50)
ௐ ஸூக்ஷ்ம ரூபிணே நம:
ௐ ப்ருஹத் தனவே நம:
ௐ விஷாஶினே நம:
ௐ விதி தாத்மனே நம:
ௐ விதிதாய நம:
ௐ ஜய வர்தனாய நம:
ௐ தார்ட்யாங்காய நம:
ௐ ஜகதீஶாய நம:
ௐ ஜனார்தன மஹா த்வஜாய நம:
ௐ ஸதாம் ஸந்தாப விச்சேத்ரே நம:
ௐ ஜரா மரண வர்ஜிதாய நம:
ௐ கல்யாண தாய நம:
ௐ காலா தீதாய நம:
ௐ களா தர ஸம ப்ரபாய நம:
ௐ ஸோம பாய நம:
ௐ ஸுர ஸங்கேஶாய நம:
ௐ யஜ்ஞாங்காய நம:
ௐ யஜ்ஞ பூஷணாய நம:
ௐ மஹா ஜவாய நம:
ௐ ஜிதா மித்ராய நம:
ௐ மன்மத ப்ரிய பான்தவாய நம:
ௐ ஶங்க ப்ருதே நம :
ௐ சக்ர தாரிணே நம:
ௐ பாலாய நம:
ௐ பஹு பராக்ரமாய நம:
ௐ ஸுதா கும்ப தராய நம:
ௐ தீமதே நம:
ௐ துரா தர்ஷாய நம:
ௐ தூரா ரிக்னே நம:
ௐ வஜ்ராங்காய நம:
ௐ வரதாய நம:
ௐ வந்த்யாய நம:
ௐ வாயு வேகாய நம:
ௐ வர ப்ரதாய நம:
ௐ விநு தாநன்தநாய நம:
ௐ ஶ்ரீ தாய நம:
ௐ விஜி தாராதி ஸங்குலாய நம:
ௐ பதத் வரிஷ்டராய நம:
ௐ ஸர்வேஶாய நம:
ௐ பாபக்னே நம:
ௐ பாப நாஶனாய நம:
ௐ அக்னி ஜிதே நம:
ௐ ஜய கோஷாய நம:
ௐ ஜகதாஹ்லாத காரகாய நம:
ௐ வஜ்ர நாஸாய நம:
ௐ ஸு வக்த்ராய நம:
ௐ ஶத்ருக்னாய நம:
ௐ மத பஞ்ஜனாய நம:
ௐ காலக்ஞாய நம:
ௐ கம லேஷ்டாய நம: (100 )
ௐ கலி தோஷ நிவாரணாய நம:
ௐ வித்யுன் நிபாய நம:
ௐ விஶாலாங்காய நம:
ௐ விநுதா தாஸ்ய விமோசனாய நம:
ௐ ஸ்தோ மாத்மனே நம:
ௐ த்ரயீ மூர்த்னே நம:
ௐ பூம்னே நம:
ௐ காயத்ர லோசனாய நம:
ௐ ஸாம கான ரதாய நம:
ௐ ஸ்ரக்வினே நம:
ௐ ஸ்வச் சந்த கதயே நம:
ௐ அக்ரண்யே நம:
ௐ ஶ்ரீ பக்ஷி ராஜ பர ப்ரஹ்மனே நம:
🌹🌹🌹🙏🙏🙏

சித்தர் அறிவியல்

சித்தர் காகபுசுண்டர்‌

காகபுசுண்டர்‌ தமிழ்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌.
பல யுகங்கள்‌ வாழ்ந்தவர்‌.
சோதிடம்‌ மருத்துவம்‌, யோகம்‌, ஞானம்‌, ஆகிய துறைகளில்‌ நற்றமிழில்‌ எட்டு நூல்கள்‌ இயற்றியுள்ளார்‌.
மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்‌.
பிரளயகாலத்தில்‌ அவிட்ட நட்சத்திரப்பதவியில்‌ வாழ்பவர்‌. பிரளயகாலம்‌ முடிந்தவுடன்‌ பூமிக்கு வந்து பிற சித்தர்களுடன்‌ வாழ்பவர்‌.
”மாசிலா மனமே மகேசனின்‌ மாளிகை” என்று ஞானப்‌ பாடல்‌ பாடியவர்‌.
இவர்‌ உரோமரிஷியின்‌ குருநாதர்‌.
ராம பிரானின் குரு வசிஷ்ட முனிவர்
வசிஷ்ட முனிவரின் குரு
காகபுசுண்டர் ஆவார்.
வசிஷ்ட மகரிஷிக்கு. ஞானோபதேசம்செய்தவர்‌.
நான் யார்? என்ற கேள்வியை எழுப்பி
தங்களைத் தானே நான் யார் என்று கேட்டுக் கொண்டு ஞானம் அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொண்டு இருக்கும் ஏனைய சித்தர்களும்,
வசிட்டருடன் சேர்ந்து காகபுசுண்டரிடம் வழி கேட்டனர்.
கடவுளை அடையக் கூடிய வழிகளை அறிந்து அதன் வழி சென்று அதை அடைய வேண்டும் என்று வசிஷ்டருக்கும் ஏனைய சித்தர்களுக்கும் ஞானத்தை அருளினார் காகபுசுண்டர்.
சிவநேசன் என்பவன் ஒரு குருவிடம் சீடனாகச் சேர்ந்தான்.
சிவபெருமான் மேல் அதிகமான பக்தி கொண்ட அவனுக்கு, ‘ஈசனை விட உயர்ந்த கடவுள் இல்லை’ என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் அவனுடைய குருவோ, விஷ்ணு மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார்.
இதனால் குருவின் மீது வெறுப்பு ஏற்பட்டு, நாளடைவில் அவரை மதிக்காமல் இருக்கத் தொடங்கினான்.
இந்த நிலையில் ஒருநாள் சிவநேசன், அங்கிருந்த மகாகாலேஸ்வரர் கோவிலில் அமர்ந்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய குரு அங்கு வந்தார். அவனோ, குருவைக் கண்டும் காணாமல் இருந்தான்.
சீடனைப் பற்றித் தெரிந்திருந்த குரு, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் ஆலய இறைவனோ, சீடனின் செய்கையால் கோபமடைந்தார்.
இறைவனே அசரீரியாக ‘ஆணவத்தால் அறிவை இழந்த மூடனே! குருவை மதிக்காமல் இருக்கும் உனது செயல் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆலயத்தில் அமர்ந்து கொண்டு, என் முன்பே உன் குருவை அலட்சியம் செய்யும் உன்னுடைய வேண்டுதல்கள் எதையும் நான் ஏற்கப் போவதில்லை. குருவை மதிக்காமல், மலைப்பாம்பைப் போல் அமர்ந்திருந்த நீ, மலைப்பாம்பாகவே மாறிப்போவாயாக’ என்று சாபம் கொடுத்தார்.
தான் வணங்கி வந்த இறைவனே, தனக்குச் சாபம் கொடுத்ததை நினைத்து சிவநேசன் வருத்தமடைந்தான்.
சிவநேசனுக்கு சாபம் கிடைக்கத் தானே, காரணமாகிவிட்டதை எண்ணி குரு வருத்தமடைந்தார்.
அவர் மகா காலேஸ்வரிடம், ‘இறைவா! என் சீடன் தங்கள் மேல் கொண்ட அதிக பக்தியால், விஷ்ணுவை வணங்கும் என்னை மதிக்க தவறிவிட்டான். இதை நானே பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அவனுக்கு தாங்கள் கொடுத்த சாபம் மிகவும் கடுமையானது. எனவே அவன் மீது கருணை கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார்.
குருவின் பாசம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்தியது. ‘வேதியரே! உங்களது உயர்ந்த எண்ணம் என்னை மகிழ்விக்கிறது. இருப்பினும் அவன் சாபத்தை ஏற்றுதான் ஆக வேண்டும். பாம்பாக மாறும் இவன், அதன் பின்பும் சில பிறப்புகள் எடுப்பான். ஒவ்வொரு பிறப்பிலும், பிறப்பு, இறப்பினால் ஏற்படும் துன்பங்கள் இவனுக்கு இருக்காது. அனைத்துப் பிறவிகளிலும், இவன் பெற்ற தத்துவ ஞானங்கள் அனைத்தும் அவனுடனேயே நிலைத்திருக்கும். இனி அவனுடைய பிறவிகள் அனைத்திலும், அவன் வெறுத்து வந்த விஷ்ணுவின் மேல் இறைபக்தியுடன் இருப்பான்’ என்றார்.
சாபத்தால் மலைப்பாம்பாக மாறிய சீடன், பல ஆண்டுகள் வாழ்ந்து இறந்தான்.
அதன் பிறகும் பல பிறப்புகளை எடுத்தான்.
அந்த பிறப்புகளில் எல்லாம் விஷ்ணு பக்தனாக வாழ்ந்தான்.
இறுதியில் ஒரு உயர்குலத்தைச் சேர்ந்த வீட்டில் மகனாகப் பிறந்தான்.
புசுண்டன் என்ற பெயரில் அவன் அழைக்கப்பட்டான்.
சிறுவனாக இருந்த போது அவனுக்கு விஷ்ணுவை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. பல இடங்கள் அலைந்து திரிந்தான்.
இறுதியில் ஒரு லோமச முனிவரைச் சந்தித்தான்.
அவரிடம், ‘சுவாமி, நான் விஷ்ணுவை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும். அதற்கான தகுந்த ஆலோசனையைத் தந்தருளுங்கள்’ என்று வேண்டினான்.
அதைக் கேட்ட முனிவர், ‘இறைவன் விஷ்ணுவும், ஆன்மாவும் வேறு வேறல்ல. நீரின்றி பிரியாத அலைகள் போல, பரமாத்வாகிய விஷ்ணு பெருங்கடலாகவும், நாமெல்லாம் அதில் தோன்றும் அலைகளாகவும் இருக்கிறோம். ஆகையால் இறைவனை உன்னிடம் இருந்து பிரித்துப் பார்த்து தேடி அலைய வேண்டியதில்லை’ என்று அறிவுரை வழங்கினார்.
அவரது அறிவுரையை ஏற்காத சிறுவன்,
‘சுவாமி! விஷ்ணுவைக் காண நல்வழியைக் காட்டச் சொன்னால், அவரும் நாமும் வேறல்ல என்று கூறி, என் எண்ணத்தை திசை திருப்பி விடப் பார்க்கிறீர்களே’ என்று கோபப்பட்டான்.
அவனது பேச்சால் கோபமடைந்த முனிவர், ‘முட்டாளே! நான் சொல்லும் எதையும் ஏற்காமல், உன்னுடைய விருப்பத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் உனக்கும், கூவி அழைத்து உணவு தருபவரைப் பார்த்தே அஞ்சி ஓடும் காகத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை. எனவே இன்று முதல் நீ காகமாகவே மாறிப் போவாய்’ என்று சாபமிட்டார்.
காகமாக மாறிய புசுண்டன், முனிவர் மேல் கோபம் கொள்ளாமல், ‘சுவாமி! காகத்தின் உருவிலாவது நான் விஷ்ணுவைக் காண முடியுமா?’ என்று கேட்டான்.
விஷ்ணு மேல் அவன் கொண்டிருந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த முனிவர்,
அவனுக்கு சில விஷ்ணு மந்திரங் களைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர், ‘காக உருவில் உள்ள நீ, இனி பிறப்பு, இறப்புகள் இன்றி வாழ்வாய். நீயாக விரும்பி இறப்பை ஏற்கும் வரை, உனக்கு அழிவே இல்லை. நீ வாழும் காலத்தில் விஷ்ணுவை மட்டுமின்றி, சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவலோகத்தினரையும் கண்டு மகிழ்வாய். காகபுசுண்டர் எனும் பெயரில் சிறப்படையும் உன்னை, அவர்களே அழைத்துச் சிறப்பு செய்வார்கள்’ என்று வாழ்த்தினார்.
முனிவரின் வாழ்த்தால் மகிழ்ச்சியடைந்த புசுண்டன், காக வடிவில் விஷ்ணு மந்திரத்தை உச்சரித்தபடியே வானில் பறந்தான்.
அதன் பிறகு காக வடிவிலேயே இருந்து உலகில் நிலவும் பல உண்மைகளை கண்டறிந்து, தனது அறிவுத்திறமையை வளர்த்துக் கொண்டே சென்றான். நாளடைவில் நிறைவுபெற்ற மகரிஷியாக மாறிப்போனார்.
உலகம் பல அழிவுகளை சந்தித்து, ஒவ்வொரு அழிவின் போதும் புதிய உலகம் தோன்றிக் கொண்டிருந்தது. உலக அழிவில் உலக உயிர்கள் அனைத்தும் அழிவுற்றாலும், காக வடிவில் இருந்த காகபுசுண்டர் மட்டும் அழிவின்றி, உலக சுழற்சியைக் கண்டு வியந்தபடி இருந்தார். அதனால் அவரது அறிவுத்திறன் பன்மடங்கு அதிகரித்தபடி இருந்தது.
உலக அழிவின் போதெல்லாம் காகபுசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது கண்டு தேவலோகத்தினர் ஆச்சரிய மடைந்தனர்.
அவர்கள் சிவபெருமானிடம் சென்று, ‘இறைவா! உலகம் அழிந்து, அதில் வசித்த உயிரினங்கள் அனைத்தும், விஷ்ணுவிடம் சென்றடைந்து விட்டன. ஆனால் காக வடிவிலான புசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்டனர்.
‘காகபுசுண்டர் உலக அழிவில் இருந்து தப்பித்தது பற்றி, நீங்கள் விஷ்ணுவை சென்று கேட்டறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் சிவபெருமான்.
இதையடுத்து தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று இதுபற்றி வினவினர்.
விஷ்ணுவோ, ‘உலகத்திலிருக்கும் அனைத்து உயிர்களும், ஊழி காலத்தில் அழிந்து போயின. அவை அனைத்தும், பள்ளி கொண்டிருந்த என்னிடம் வந்து சேர்ந்தன.
அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். என்னுடைய சுதர்சன சக்கரம் எவராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது.
ஆனால் காகபுசுண்டர் மட்டும், சக்கரத்தைச் சுழல விடாமல் செய்து, அதிலிருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் என்னிடமிருக்கும் சக்கரத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவராக இருக்கிறார்.
அவர் எப்படி அந்தச் சக்கரத்தின் சுழற்சியில் இருந்து தப்பித்தார் என்பதை, அவரையே அழைத்துக் கேட்டால்தான் தெரியும்’ என்றார்.
தேவர்கள் அனைவரும் வசிஷ்ட முனிவரின் வாயிலாக காகபுசுண்டரை கயிலாயம் வரவழைத்தனர்.
கயிலாயத்தில் காகபுசுண்டரின் வரவுக்காக முப்பெரும் தேவர்களும் தங்கள் மனைவியருடனும், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்டோரும் காத்திருந்தனர்.
வசிஷ்ட முனிவரும்
காகபுசுண்டரை அழைத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தார்.
தேவர்கள் அனைவரும், ‘காகபுசுண்டரே! பூலோகத்தில் வாழும் தாங்கள், உலக அழிவில் இருந்து எப்படி பிழைத்தீர்கள்?’ என்று கேட்டனர்.
‘நான் இந்த உலக அழிவை மட்டுமல்ல, இதற்கு முன்பாக ஏற்பட்ட பல உலக அழிவுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். அழிவுக்குப் பிறகு புதிதாக தோற்றுவிக்கப்படும் உலகத்தையும் நேரில் கண்டிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து, பல அதிசய நிகழ்வுகளை பார்த்து வருகிறேன். இந்த உலகத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக அறிந்து வைத்துள்ளேன். அதற்கும் மேலாக நான் விரும்பும் போதுதான் எனக்கு மரணம் நிகழும் என லோமச முனிவர் எனக்கு வரம் அளித்துள்ளார். இவையெல்லாம் தான் இதற்கு காரணம்’ என்று கூறி முடித்தார்.
சாபங்களைக் கூட மகிழ்வுடன் ஏற்று, அதற்கு விமோசனம் எதுவும் கேட்காமல், சாபம் கொடுத்தவர்களிடமே, சாபத்தைக் காட்டிலும் அதிக பயன் தரும் வரங்களைப் பெற்று உயர்ந்த காகபுசுண்டரை, தேவர்கள் அனைவரும் பாராட்டினர்.
காகபுசுண்டரும்‌ அவர்‌ மனைவி பகுளாதேவியும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ தென்பொன்பரப்பி கிராமத்தில்‌ உள்ள சுவர்ணாம்பிகை உடனுறை சுவர்ணபுரீஸ்வரர்‌ ஆலயத்தின்‌ பக்கத்தில்‌, கோவிலின்‌ ஈசான்ய மூலையில்‌ சமாதி கொண்டுள்ளனர்‌.
கயிலைநாதரின்‌ ஆணையின்படி காக புசுண்டர்‌ ஆச்சாள்புரம்‌ வந்து 'திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகராஜர்‌ திருக்கோவிலை அடைந்து அந்தக்கோவிலினுள்‌ நிருதி திக்கில்‌ அமர்ந்து தவமியற்றி வந்தார்‌. திருஞான சம்பந்தர்‌ திருமண நாளான வைகாசி மாதம்மூல நட்சத்திரத்தன்று வெளிப்பட்ட சிவ ஜோதியில்‌ திருமணத்திற்கு வந்திருந்த எல்லா சிவ பக்தர்களுடனும்‌ சேர்ந்த காகபுசுண்டரும்‌ முக்தி அடைந்தார்‌.
காகபுசுண்டர் அருளிய நூல்கள்
காகபுசுண்டர் வைத்தியப்பெருங்குறள்
காகபுசுண்டர் நாடிசோதிடம்
காகபுசுண்டர் ஞானம் 80
காகபுசுண்டர் உபரிடதம் 31
காகபுசுண்டர் காவியம் 33
காகபுசுண்டர் குறள் 16
காகபுசுண்டர் பெரு நூல் 1000
காகபுசுண்டர் பஞ்சபட்சி நூல்,
காக புசுண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை:
1. புசுண்டர் நாடி,
2. காகபுசுண்டர் ஞானம் – 80
3. காக புசுண்டர் உபநிடதம் – 31
4. காக புசுண்டர் காவியம் – 33
5. காக புசுண்டர் குறள் – 16

இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புசுண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

Siththars' urgent call for humanity சித்தர்கள் அவசர அறைகூவல்

*சித்தர்கள் அவசர அறைகூவல்..!*
*மாந்தரே..! எம் சேய்களே..! தீதும் நன்றும் உம் செயலே..!* கருணைபடக் கூறுகிறோம் மாந்தரே கடவுளையோ/ இயற்கையையோ குறைகூறிப் பலன் ஏதுமில்லை. கருணைமிகு மானிடரே தீதும் நன்றும் கடவுளோ/ இயற்கையோ தந்து வருவதில்லை. படும் வேதனைகள் எல்லாம் வினைக்குற்றமே (சிந்தை, சொல், செயல் குற்றங்கள்) அன்றி வேறேதுமில்லை. சக மனிதருக்கும், வாயில்லா உயிர்களுக்கும் நீங்கள் காலங்காலமாகச் செய்த தீவினையின் உச்சமே உங்களை அழிக்கும் அச்சமாக மாறியுள்ளது. மன்னிப்புக் காலம் முடிந்துவிட்டது. கிருமித்தொற்று சில மாதங்களில் குறையும். மீணடும் உங்கள் சிந்தை, சொல், செயல்களை மாற்றாவிட்டால் நச்சுக்கிருமிகள் முதற்கொண்டு இயற்கை கோரத் தாண்டவம் ஆடுமென கருணையுடன் எச்சரிக்கிறோம். எல்லா உயிர்களையும் உங்கள் உயிர்போல் பாருங்கள். காலங்காலமாக உங்கள் முன்னோர் முதற்கொண்டு செய்த பாவமூட்டைகள் மன்னிக்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. *கருணை இழப்பீரானால் கருணையின்றி அழிவைச் சந்திப்பீர்கள். * உங்கள் பாற் கொண்ட அக்கறையால் கூறுகிறோம் சீவதயவுடன் இருங்கள். உங்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளுக்கு நீங்களே பொறுப்புதாரிகள். அச்சம் வேண்டாம் கருணைபட வாழுங்கள் உங்கள் எதிர்காலம் நலமாகும் வளமாகும். சுபம்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

No comments:

Post a Comment