Thursday, April 9, 2020

இராவணன் இயற்றிய நூல்கள்

💞பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள்!!💕

இராவணேசனின் ஓவியத்தை இலங்கை நாரஹென்பிட்ட சந்திக்கு அண்மையில் Baseline வீதியில் பிரமாண்டமான ஓவியமாக வரைந்திருக்கிறார்கள்.

இன்றையநாட்களில் இராவணன் அலை முழு இலங்கையிலும் படித்தவர் வட்டங்களில் வீசிக்கொண்டிருக்கிறது.
இன்று அவனை முன்னோன் என்று புனைவதிலும் அதற்கான ஆதாரங்களை திரட்டுவதிலும் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சீகிரிய , இராவண எல்ல , சீத்தாஎலிய , வாரியபொல , தொலுக்கந்த (சஞ்சீவினி மலை) போன்ற இடங்களினை இராவணனோடு பிணைத்து வரலாறு உருவாகிக்கொண்டு வருகிறது. கொழும்பு புத்தக கண்காட்சிகளில் இராவணன் தொடர்பான புத்தகங்களுக்கு தனிப்பகுதியே ஒதுக்குகிற அளவுக்கு நூல்களை வேறு எழுதித்தள்ளுகிறார்கள்.
https://www.facebook.com/groups/305917699863621
பத்துதலை திண்தோள் கருநிறம் என்று இப்போது நாங்கள் சொல்கிற அதே இராவணனின் உருவம் கம்பராமாயணத்திலும் , அதற்கு முன் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் பெருமானின் காலத்திலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. (தகவல்: துவாரகன்)
அநேகமான இராவணன் இயற்றிய நூல்கள் ஓலை சுவடிகளாகவும், பிரதிகள் இல்லாமலும் இருந்தன. இவை யாழ் நூலகத்தில் தீக்கிறையானது.ஆனால், சில முன்னமே அச்சிடப்பட்டு விட்டது. அவை தான் இப்பொழுதும் கிடைக்கின்றது.

தமிழ்ப் பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்.

உடற்கூறு நூல்
மலை வாகடம்
மாதர் மருத்துவம்
இராவணன் – 12000
நாடி, எண்வகை பரிசோதனை நூல்
இராவணன் வைத்திய சிந்தாமணி
இராவணன் மருந்துகள் - 12000
இராவணன் நோய் நிதானம் - 72 000
இராவணன் – கியாழங்கள் – 7000
இராவணன் வாலை வாகடம் – 40000
இராவணன் வர்ம ஆதி நூல்
வர்ம திறவுகோல் நூல்கள்
யாழ்பாணம் – மூலிகை அகராதி
யாழ்பாணன் – பொது அகராதி
பெரிய மாட்டு வாகடம்
நச்சு மருத்துவம்
அகால மரண நூல்
உடல் தொழில் நூல்
தத்துவ விளக்க நூல்
இராவணன் பொது மருத்துவம்
இராவணன் சுகாதார மருத்துவம்
இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
இராவணன் அறுவை மருத்துவம் – 6000
இராவணன் பொருட்பண்பு நூல்
பாண்ட புதையல் முறைகள் – 600
இராவணன் வில்லை வாகடம்
இராவணன் மெழுகு வாகடம்

**"இராவணன் மேலது நீறு **
**எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு **
**பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு **
**தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி **
ஆலவாயான் திருநீறே"
-திருநீற்றுப்பதிகம்

இராவணன் தமிழின மன்னன் என்போம்...

No comments:

Post a Comment