Tuesday, April 7, 2020

வேது (ஆவி )பிடித்தல்

வேது (ஆவி )பிடித்தல்.

# இன்று நேச்ரோபதி ஸ்டீம் பாத் எனப்படும் வேது பிடிக்கும் முறை இன்றும் நமது கிராம மக்களின் வழக்கத்திலுள்ள சித்தர்களின் தமிழர் வைத்திய முறையே.

# நொச்சி கற்பூரவள்ளி ஓமம் வாதரச இலைகளுடன் கொதிக்க வைத்த நீரில் வேது பிடிப்பார்கள் இலைகள் இல்லாத நேரத்தில் சிறிது செங்கல் கல்லை கொதித்த வைத்த நீரில் போட்டு வேது பிடிக்க சளி இருமல் தலைபாரம் யாவும் ஒரு தும்மலோடு சரியாகி விடும்.
# இருமலோடு சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் ஒரு சிலருக்கு உடனே தெரிவதில்லை.

# மூச்சுக்குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகமான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

# நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) சளியின் ஆரம்பம் வகை எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.

# நெஞ்சுசளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

# கற்பூரம்+தேங்காய் எண்ணெய்
# சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.

# சிறிது குணமானவுடன் விட்டு விடாமல் தொடர்ந்து தடவி வந்தால் நாள்பட்ட நெஞ்சு சளி அதனால் உண்டாகும் மூச்சடைப்பைக் குணப்படுத்தி விடலாம்.

# உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்.
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு இயற்கையான வழிமுறை

# தேன்+எலுமிச்சை பழச்சாறு
# எ.பழச்சாறு சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும்.

# மிளகுத் தூளையும், மஞ்சளையும் பனகற்கண்டு தேநீருடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

# நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.

# புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

# சிப்பி காளான் உணவுளை உண்பதால் முற்றிய சளி / மூச்சிரைத்தல் காசநோய் போன்ற நூரையீரல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.

# ப்ரிஜ்க்குள் உள்ள ஐஸ் கீரீம் எப்படி உருகாதோ அது போலத்தான் நெஞ்சுச்சளியின் தன்மை
# (கொரோனொ) நெஞ்சுசளி மூச்சடைப்பு உள்ள நோயாளிக்கு
முதல் சிகிச்சை(ஏ.சி.ரூம் வார்டு அல்ல)

0.வெதுவெதுப்பான காற்றோற்றம் உள்ள தனிமையான இடம்.
1.ஆறு முறை (4 மணி நேரத்திற்கு ஒரு முறை) சூடான கற்பூர தைல ஒத்தடம்.
2.இண்டு முறை வேது பிடித்தல்.
3.குளிர்ச்சி (கபம் )அற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு.
4.தொடர்ச்சியான மருந்துகள்.
5.எல்லாம் சரியாகி விடும் என்ற மன தைரியம். தன்னம்பிக்கை.
6.அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனை (Distance healing) .
படிங்கள். பகிருங்கள் Share

சித்தர் அறிவியல்


No comments:

Post a Comment