Monday, April 20, 2020

பட்டினத்தார்: நாறுமுடலை

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ் சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம் கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது ஏறும் படியருள்வாய் இறைவா..! - ஆசான் #பட்டினத்தார்
: "துர்நாற்றமடிக்கும் என் இந்த உடலை, இறந்தபின்பு சுடுகாட்டிற்கு அருகில் வாழும் நரிகளுக்கு ஒரு மூட்டை உணவாகப் போகப் போகிற இந்த உடம்பை, நான் தினமும் சோறும் கறியும் (மரக்கறியோ அல்லது மாமிசக் கறியோ) நிரப்பிய பாத்திரமாகிய என் உடம்பை சிற்றின்பத்தில் விழாமல் அருள் செய்வாய், இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!" [குறிப்பு: நாற்றம் என்பதற்கு தூய தமிழில் வாசனை என்று பொருள். "கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ ..." என்ற ஆண்டாளின் பாடலில், வாசனை என்று பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வழக்குத் தமிழில் நாற்றம் என்பதை துர்நாற்றத்தைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம். இங்கும் அது துர்நாற்றம் என்றே பொருள்படுகிறது.]
https://www.facebook.com/groups/305917699863621 சித்தர் அறிவியல்
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya 

|| ஓங்காரக்குடில் Ongarakudil || Wisdom of Siddhas சித்தரியல் ||||
<3 Aum Muruga ஓம் மு௫கா <|||||bbb


||  Contact தொடர்பு  || || More Videos ||

சித்தர் அறிவியல் 

No comments:

Post a Comment