அறுபது தமிழ் வருடங்களின் கதை என்ன?
************************************
வானியலில் பெரிய கிரகம் வியாழன், இது ஒரு நாளைக்கு ஐந்து கலைகள் (minutes) நகரும்.
************************************
வானியலில் பெரிய கிரகம் வியாழன், இது ஒரு நாளைக்கு ஐந்து கலைகள் (minutes) நகரும்.
அடுத்த மிகப்பெரிய கிரகம் சனி, இது ராசிச் சுற்றுப்பாதையில் ஒரு நாளைக்கு இரண்டு கலைகளை ((minutes) நகரும்.
இப்போது நாம் இந்த இரண்டு கிரகங்களும் பூச்சிய நிலையில் மேஷ ராசியின் தொடக்கத்தில் நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு ராசி என்பது வானியியலில் 30 பாகைகளைக் கொண்ட கோண அளவு. இந்த 30 பாகை கோண அளவை மேற்கூறிய இரண்டு கோள்களும் கடக்க எடுக்கும் அளவும்
வியாழன் - 01 வருடம்
சனி - 2 1/2 வருடங்கள்
சனி - 2 1/2 வருடங்கள்
பன்னிரெண்டு வருடங்களில் வியாழன் மொத்தமாக 360 பாகை வட்டப்பாதையான ராசி மண்டலத்தை முற்றாக சுற்றி வரும். இது வியாழச் சுற்று எனப்படும்.
சனி ஒரு ராசி மண்டலத்தை 360 பாகைகளை சுற்றி வர 30 வருடங்கள் ஆகிவிடும். இதை சனியின் ஒரு ராசிச் சுற்று எனப்படும்.
12 என்ற இலக்கத்திற்கும் 30 என்ற இலக்கத்திற்குமுரிய Least common multiple number எதுவென்றால் 60,
இதை வானியலில் சொல்லுவதானால் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் சனியும் வியாழனும் ஒரே இராசியில் அருகருகே நிற்கும்.
அதாவது நீங்கள் பிறந்த போது இருந்த சனியினதும் வியாழனதும் கிரக நிலை உங்கள் 60 வயதில் சரியாக ஒரே போல் வரும்.
இது ஜோதிடத்தில் இன்னொரு பிறப்புப் போன்றது என்பதால்தான் சஷ்டியப்தப் பூர்த்தி செய்யப்படுகிறது. சீன கலாச்சாரத்தில் ஒரு வாழ்கைச் சுற்றை முடித்தவராக கருதப்படுகிறார்.
ஆக அறுபது வருடங்களின் கதை என்பது சனியினதும் வியாழனதும் வானியல் சுற்றுப்பாதை சார்ந்தது.
இந்த இரண்டு கிரகங்களும் வானியலில் மிகப்பெரிய கிரகங்கள் என்பதும், மனித வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த வானியல் பாதை கணித சூத்திரத்தையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கணித்து ஒவ்வொரு வருடம் எனக்குறித்து சனி - வியாழ விளைவு என்ன நன்மை, பாதிப்பை உலகிற்குத் தரும் என்று பாடல் எழுதி வைத்தார்கள்.
எப்போதும் மனிதர்கள் உண்மைக்கும் அரிதாரம் பூசி மனதின் கற்பனையைப் புகுத்தி ரசிக்கும் வல்லமை உள்ளவர்கள்; அதிலும் குறிப்பாக தமிழர்கள் இரண்டடி உயரம் பாயமுடியாத கிழவனை வானில் சுற்றிப் பறந்து சண்டை புரியும் ஹீரோவாகவும், உண்மையான ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் சாதனை புரிந்து பதக்கம் வென்றவர் யார் என்றும் தெரியாத அறிவாளிகள்!
ஆகவே எவராவது இட்டுக்கட்டும் ஆபாசக்கதைகளை நம்பிக்கொண்டு வியாக்கியானப்படுத்தும் வல்லமை உள்ளவர்கள்.
அறுபது வருடங்களின் உண்மைக் கதை தெளிந்த வானியல் இயக்கமும், அது மனித வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஜோதிடவியலையும் சார்ந்த ஒன்று! இதைத் தவிர்ந்த வேறு கதைகள் ராணி காமிக்ஸ் மாயவி கதை போல் தொட்டுக்கொள்ளலாம்!
{பிற்குறிப்பு: நான் தொழிமுறை சோதிடன் அல்ல; வானியலும் ஜோதிடமும் எனது கற்கை இச்சைகளில் (study passion) ஒன்று}
via S. S. Sumanan
சித்தர் அறிவியல்
Nathan Surya
"அறிவுக்கொவ்வாத 60 ஆண்டுகள்" எனத் தமிழ்ப் பாட்டெழுதிச் சொன்னாராம்...??!! அப்ப சீனர்களும் ஆரிய மாயையில் சிக்கினரோ..??!!
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
No comments:
Post a Comment