"என்றானும் சாவாமல் கற்பதே கல்வி"
- ஆசான் ஔவையார்.
"பிறப்பென்பது பேதமை"
- ஆசான் திருவள்ளுவர்.
"சகாதவனே சன்மார்க்கி"
- ஆசான் வள்ளலார்
சித்தர்கள் வகுத்த 64 கலைகள் + '1',
65வது கலை சாகாக்கலை!அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்
அதற்குமேலொரு கலையானதும் அறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே
-பாம்பாட்டிச் சித்தர்
சித்தர்கள் The Ascended Masters
https://www.facebook.com/groups/305917699863621
அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்துப் பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் இறப்பு-பிறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.
இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான். "அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது மானிடராயினும்.. கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது தானமும் தவமும் தான் செய்தலாயின் வானவர் நாடி வழி பிறந்திடுமே!" - ஆசான் ஓளவையார் பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான். ''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.'' - திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்) ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம். https://www.facebook.com/groups/305917699863621 "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்." - திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்) "என்றானும் சாவாமல் கற்பதே கல்வி" - ஆசான் ஔவையார். "பிறப்பென்பது பேதமை" - ஆசான் திருவள்ளுவர். "சகாதவனே சன்மார்க்கி" - ஆசான் வள்ளலார் எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான். “பெறுதற்கரிய பிறவியை பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே” - திருமந்திரம் (ஆசான் திருமூலர்) ஓம் ஆசான் மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம். ஓம் ஆசான் ஓளவையார் திருவடிகள் சரணம். ஓம் ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் சரணம். ஓம் ஆசான் திருமூலர் திருவடிகள் சரணம். ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி நன்றி! -Nàthàn கண்ணன் Suryà 10/07/2015 . ஓங்காரக்குடில் Ongarakudil Aum Muruga ஓம் மு௫கா
உடம்பினுள் உத்தமனைக் காண்
#உடம்பினுள் உத்தமனைக் காண்
சித்தர்கள் The Ascended Masters
தானம் செய்வாரின் தலை 295 #ஒளவைக்குறள் 16 #திருக்குறள் 34 , 295 ஞானிகள் காரண உடம்பை பெற்றவர்கள். நமது உடம்பு தூல தேகம் கண்ணால் பார்க்க கூடியது ஆனால் சூட்சுமதேகம் என்றால் அறிவுக்கு மட்டுமே புலப்படும். உடம்பைப் காப்பாற்றிக் கொண்டவனால்தான் பிறவியை ஒழிக்க முடியும். சைவ உணவை உட்கொண்டு தினம் தினம் தியானம் செய்ய வேண்டும். நம் உடம்புக்குள்ளே மிக அற்புதசக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான் சுப்ரமண்யர் அருளாசி வேண்டும்.. அவர் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஓர் ஒளிச்சுடர், சொல்லவொண்ணாப் பேரானந்தத்தை தரக்கூடிய ஒர் ஒளிச்சுடரை அவர் அடைந்திருக்கிறார். அதை நாம் அடைய வேண்டும். அதை அடைவதற்குக் கடைசி, குறையெல்லாம் நிவர்த்திப்பதற்கு நிறை எது ? என்று கேட்டான். அது மீண்டும் பிறவாமை. அதுதான் நிறை. குறையெல்லாம் முடிந்தது. முன் செய்த பாவம் குறை. கல்வி குறை; மன உளைச்சல்; பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து கொண்டே வருகிறது. தீரும் வரை விடக்கூடாது. அதுதான் பிரச்சனை, நம் குறை தீர்ந்தது; செல்வநிலை பெருகியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் தீர வேண்டும். கடைசியில் பெற வேண்டிய ஒன்று. நிறைவான வாழ்வு. எப்போதும் நிறைவான வாழ்வு. அதை அடைவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும். அதுதான் முடிவு. பூஜையின் முடிவு அதுதான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இப்ப ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் திருவடியைப் பற்ற வேண்டும். அதுதான் குறையது கூறி குணங்கொண்டு போற்ற என்றார். நம் குறையெல்லாம் சொல்லி, குணங்கொண்டு போற்றணும். போற்றுதல் என்பது ஞானிகளைப் புகழ்ந்து பேசுதல். நல்ல பண்போடு குணங்கொண்டு பேசணும். "குணங்கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டி" நம் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது இப்போது. எந்தச் சிறையில் கிடக்கிறது? மனமாசு. மலமாசு. உடம்பு என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தில் அந்த ஆன்மா சிறைப்பட்டிருக்கிறது. சிறை உடல் நீ அறக் காட்டி – ஆன்மா சிறைப்பட்டிருப்பதை, நீக்கக் காட்டி, அது அற்றுப் போகும்படி செய்து, "சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே" நாம் சிவத்தோடு சேர வேண்டும். இப்போது நாம் சவமாக இருக்கிறோம். நம் உடம்பில் தலைவன் இருந்தாலும், புலப்படவில்லை நமக்கு. அதுதான், உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவு அறியாதே -திருமந்திரம்-கவி எண் 431 நம்மோடு தலைவன் இருக்கிறான். ஆனால் அவனை அறிய முடியாது. ஆக நாம் என்ன செய்யணும், சிவத்தோடு இருக்கணும். நம் உடம்பிற்குள்ளேயே தலைவன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் "உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை" அவன் நம் மனதை விட்டு ஒரு அடி கூட, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஒரு ஜாண் கூடப் போகவில்லை. உள்ளம் விட்டு ஓரடி என்று சொன்னார். "உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவு அறியாதே." அவனும் நாமும் இருக்கிறோம். ஆனால், நாம் உடம்பாகிய சாக்கடைக்குள்ளே ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணி ஜொலிக்க வேண்டும். அதுவோ ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் உள்ள ஒரு வைரமணி. அந்த வைரஜோதி, அதுதான் அந்த ஆணிப்பொன் அம்பலம் என்று சொல்வார். அந்த மணி வந்து உடம்பாகிய நாற்ற தேகம், அசுத்தத்தில் கிடக்கிறது. அப்ப என்ன சொல்வார், சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே என்றார். சுடரைத் தட்டி எழுப்பணும். தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே. *திருமூலர்* *பொருள்* தேனை உண்ணும் போது வரும் இன்பத்திற்கு கருப்பு சிவப்பு என்று உருவம் கொடுக்க முடியுமா அதுபோல் பேரின்ப மயமான இறைவனுக்கு உருவம் கொடுக்கமுடியாது. சொருபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறியாமை என்கிறார். தேனுக்குள் சுவை இன்பம் இருப்பதுபோல் நம் உடம்புக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்கிறார் திருமூலர். ஆசான் ஔவையார் அருளிய ஞானக்குறள் <உடம்பின் பயன்> உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். 11 உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். 12 ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். 13 பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14 உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னிய தேயாம். 15 மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. 16 ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. 17 உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18 உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. 19 அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். 20
https://www.facebook.com/groups/305917699863621
ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்
சித்தர் அறிவியல்
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
சாகாக்கலை
# சித்தர்கள் வகுத்த 64 கலைகள் + '1',
65வது கலை சாகாக்கலை!
சித்தர்கள் The Ascended Masters
அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்
அதற்குமேலொரு கலையானதும் அறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே
-பாம்பாட்டிச் சித்தர்
சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் எவை?
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
65வது கலை சாகாக்கலை!
சாகாக்கலை ஆனது ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றது.
https://www.facebook.com/ photo.php?fbid=101558095554 85254&set=pb.561110253.-22 07520000.1437666329.
Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
65வது கலை சாகாக்கலை!
சித்தர்கள் The Ascended Masters
அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்
அதற்குமேலொரு கலையானதும் அறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே
-பாம்பாட்டிச் சித்தர்
சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் எவை?
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
65வது கலை சாகாக்கலை!
சாகாக்கலை ஆனது ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றது.
https://www.facebook.com/
Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
Posted By Nathan Surya
No comments:
Post a Comment